நோர்வேஜிய நீரிழிவு சங்கத்துடன் இணைந்து சுறுசுறுப்பாக இருங்கள்

-      உடல் அசைவுகளுடன் கூடிய ஆயத்தப் பயிற்சிகள்

நோர்வே நீரிழிவு சங்கத்தின் உடற்பயிற்சி காணொளிகள் நோர்வேஜிய சுகாதார பணியகத்தின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை நோர்வேஜியன், ஆங்கிலம், அரபு,சோமாலி,துருக்கி,உருது, குர்திஸ்,தமிழ்,ஸ்பானிஸ், மற்றும் போலந்து ஆகிய வௌ;வேறு பத்து மொழிகளில் உங்களுக்கு கிடைக்கின்றது. காணொளிகள் உங்களுக்கு பொருத்தமான முறைகளில் தெரிந்தெடுத்து பயன்படுத்துவதற்கான வௌ;வேறு பயிற்சிகளை கொண்டுள்ளன: உடலை தயார்படுத்தல்  வலுவூட்டல் மாற்று ஒழுங்கில் செயற்படல் உடல் உறுப்புக்களை நீட்டியும் மடித்தும் சீராக்குதல் ஆகிய பயிற்சிகள்.

ஓவ்வொரு பயிற்சிக்குமான சிறு காணொளி இணைப்புக்கள் காட்டப்படுகின்றன. அவற்றைக்கொண்டு உங்களுக்கான சொந்த பயிற்சித்திட்டத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டலை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் விளைவினை அடையும்வரை ஒவ்வொரு உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்வது கூடிய நன்மையைத் தரும்.

 வலிமையுட்டும் பயிற்சிகளையும் வௌ;வேறு நிலைகளில் மாற்று ஒழுங்கில் செய்வது ஒரு சிறந்த வழியாகும். உடற்பயிற்சியின் போது ஒவ்வொரு 45வினாடி பயிற்சிகளுக்கும் பின்பு 15வினாடி கால இடைவெளியை பேணுமாறு இசையினை ஒழுங்குபடுத்தலாம். நீங்கள் பயிற்சி செய்யும் இடத்தில் இரண்டு நிலைகளுக்கிடையில் மாறிமாறி நகர்ந்தும் அல்லது ஒரிடத்தில் நிலையாக நின்றும் பயிற்சி செய்யலாம்.

உடற்பயிற்சியின் போது இசையினால் பலருக்கு உற்சாகம் கிடைக்கின்றது என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு காணொளியிலும் காட்டப்படும் உடற்பயிற்சிகளைக்கொண்டு நீங்களே உங்களுக்கான பயிற்சித்திட்டத்தை உருவாக்கும்போது அது உங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகின்றது. பலருக்கு அத்தகைய பயிற்சிகளை ஆரம்பிப்பதும் தொடர்ந்து செய்வதும் இலகுவாக இருக்கின்றது. எல்லா பயிற்சிகளும் சிறு சிறு அசைவுகளை கொண்டதாகவும் உடலுக்கு வலிமையும் உள்ளத்திற்கும் நிறைவும் தருவதாகவும் அமைகின்றன. ஏனையோருடன் இணைந்து நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது அது உடற்பயிற்சி ஆரம்பிப்பதற்கும் தொடர்ச்சியாக செய்வதற்குமான ஊக்குவிப்பினை உங்களுக்கு தருகின்றது. குழுவாக செயற்படும்போது ஊக்கம் கிடைப்பது இயல்பானதே. உங்கள் குடும்பத்தினருடன் அல்லது உங்களுக்கு அண்மையில் உள்ள ஊக்குவிப்பு குழுவினரோடு இணைந்து உடற்பயிற்சிகளை செய்யுங்கள்:அங்கு உங்களுக்கு கிடைப்பது உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்வதற்கான தூண்டுதலே!